Javascript Menu by Deluxe-Menu.com Welcome to Thubee GMBH

நிலத்தோடு சொந்த வீடு என்பது
வாழ்வில் சேர்க்கும்
சொத்து மட்டுமல்ல
குடும்பத்தோடு நின்மதியாக
வாழும் ஆலயமும் ஆகும்.

Languages :     தமிழ்    English     Deutsch   

 

முக்கியமானவை

 

 

 

  பிற நாடுகளிலிருந்து SWISS இல் வீடு கட்டி விற்பனை செய்ய விரும்புவோர், உங்கள் பெயரின் பதிவோடு வீடு கட்டி விற்க முடியும்.
கட்டிய வீட்டை நாமே விற்றும் தருவோம்.
 

இணைப்புக்கள்

 
காணிகள் விற்பனைக்கு
வீடு கட்ட
வீடு வாங்க
வீட்டிற்கான வங்கிக் கடன்
வீட்டிற்கான காப்புறுதி
வீடு திருத்திக் கொள்ள
தொடர்புகளிற்கு
வீட்டுப் படங்கள்
காணிப் படங்கள்
 

விளம்பரங்கள்

 

 

Poems [ கவிதைகள் ] - புனைந்தவர் : Shelva

 

 

 

பிள்ளையார் அருள் வேண்டி

ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ……….
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ……….
ஓம் ஓம் ஓம் ஓம் ஓம் ……….

உச்சி மலை மீதினிலே
உதித்தெழுந்த பிள்ளையாரே
அச்ச வினை யாவையுமே
அளித்தெறிந்த நாயகரே
பித்தனுனைப் பாடிடவே
பக்த்தியினைத் தாருமைய்யா
பகத்;தி கொண்டு பாடிடுவேன்
பாருமைய்யா கடைக் கண்ணால்
ஆசிதனை வேண்டுகிறேன்
ஆரவணைக்க வேண்டுமையா
உச்சி மலை மீதினிலே……………

உலகமெல்லாம் உன் புகழே
உயர்ந்து நிற்கிறது
தடக்கி வீழ்ந்தாலும்
நீர் எம் மனதினுள்ளே
ஆன்மீக வாழ்வினிலே
ஆணி வேர் பதிய வேண்டும்
காலமெல்லாம் மலர் தூவி
கண்ணீரால் கால் கழுவி
கேட்கின்ற வரம் யாவும்
கிடைக்கும் அருள் வேண்டும்
கடவுள் பெயர் சொல்லி
வணிகம் செய்வோரை
திசை மாற்றி மனம் மாற்றி
மண்டியிட வைக்க வேண்டும்
உச்சி மலை மீதினிலே……

பார்வதியின் மூத்த மைந்தா
பாவி எனக்கருள்வாய்
பார் புகழும் விநாயகரே
யார் வினையும் தீர்ப்பவனே
ஆனை முகத்தோனே
ஏழைகளின் காவலனே
முத்தி விநாயகனே
முழு வினையும் தீருமையா
சித்தி விநாயகனே
சீற்றத்தைத் தணியுமையா
புத்தி விநாயகரே
புது வழியைக் காட்டுமையா
பாறை விநாயகரே
பாவியென்னை ஏருமையா
ஒளவைக்கு அருளியவா
அடியேனை மறப்பீரோ?
அகத்திய விநாயகரே
அடிமைத் தனம் அறுப்பீரே
அம்பிகையின் மகன் நீயே
அடிமை நானுனக்கு
பாரதம் வரைவதற்கு
பக்கத் துணையாயிருந்தாய்
வேராக நீ இருந்து
விழுதாய் எனை வளர்த்தாய்
உச்சி மலை மீதினிலே…

போற்றிடுவோன் போற்றிடுவோன்
பாடிடுவோன் உன் புகழை
வேதனைகள் தீர்ந்தாலும்
விறைத்து மனம் ஓய்ந்தாலும்
காரணங்கள் கேட்காமல்
கடவுளுனை குப்பிடுவோன்
கலியுகத்து மானிடரும்
கண்டு வணங்கும் தெய்வம்
குடிசையிலும் தோன்றும் தெய்வம்
கோபுரத்து நாயகனே
இன மத பேதமின்றி
அனைத்து மனங்களுமே
உனைப் புகழ நானறிவேன்
உயர்ந்த புகழ் உமக்கு மட்டும்.
உச்சி மலை மீதினிலே…

வாழ்வதுவும் உன் அருள்தான்
வளர் புகழும் உன் அருள்தான்
தேய் பிறையாய் இல்லாமல்
வளர் பிறையாய் வளர்தவனே
மறந்திடுமோ என் மனமே
மாலை தனை நான் சூட
மலர் தூவி வணங்கிடவே
மண்டியிட்டுத் துதித்திடவே
கணபதியே அருள் புரிவாய்
காத்து எமை வாழவைப்பாய்
உச்சி மலை மீதினிலே…

 
 
 

 

 

 

கலைமகள் கருணை வேண்டி

என்னை மறந்து கவி பாட
எழுத்தாணி தந்தவளே
ஏழைக் கவி வரிக்கு
உவமைதனைப் படைத்தவளே
பெறுமதிகள் தாண்டி எம் தம்
புகழினுச்சி பரிசளித்தாய்
வெண்ணை திரளவிட்டு
வீறு கவி தந்தவளே
வித்தை அல்ல உன் தன்
வினைதனைத் தான் படைத்தாய்
வீரமகளின் தங்கை
கலைமகளே உனைப் புகழ்வேன்
பாடிட வேண்டுமென்றே
பல காலம் பாடுபட்டேன்
தேடிடக் கிடைக்காத
தேனமுதாம் கவி ஞானம்
நாடிட என்மனதில்
நாற்றிட்டாய் பயிராக
பேடி இன்றி என்னை
பிழைக்க வைத்த தாய் நீயே
விழியிரண்டும் நீதானே
வழி திறந்து வாழ்த்தி நின்றாய்
நாதனிலே நடனமிட்டாய்
கைதனிலே காலானாய்
கவி வழியில் நடக்கவிட்டு
கவிக் காட்டில்
அலையவிட்டாய்
வாசனைக் கவி வரியை
வாடாமல் எனக்களித்தாய்
கவிப் பூ இதழ் சொரிய
காலடியில் உனக்களிப்பேன்
காலமெல்லாம் இப்பணியை
கரையாமல்ப் புரியவேண்டும்
கலைமகளே உனைப் புகழ
கவி் தந்து அருள் புரிவாய்

 
 
தெரிவு

நல்லவர்களோடு
பழகவேண்டுமானால்
கெட்டவர்களோடு
பழகிப்பார்
அப்போதுதான்
நல்லவர்கள்
யாரென்றறிந்து
பழகலாம்

 
இரத்த பாசம்

பிறர் பிள்ளை
வீழ்ந்த போது
தூக்கினாய்
அப்போ
உன்
உள்ளம் துடித்தது
உன் பிள்ளை
வீழ்ந்த போது
தூக்கினாயே
அப்போ உன்
உதிரம்
துடித்தது
அதுதான்
இரத்த பாசம்

 
பேரல

மனிதனுக்குத்
தாகம்
வந்தால்
நீரைக்
குடிக்கின்றான்
அதேபோல்
நீருக்குத்
தாகம்
வந்ததால்
மனிதனைக்
குடிக்கிறதோ?
 
அரும

தாகம்
இருக்கும் போது
மனிதனிற்கு
ஒரு செம்பு
தண்ணீர்
கடவுளடா !
தாகம்
தீர்ந்த
பின்னே
மிகுதியில்
கால் களுவும்
உலகமடா !
 
பார்வ

பால் என்பதால்
எல்லாமே
பாலாகாது
ஏன்
கள்ளிமரத்திலும்
பால் சுரக்குமே
 
உயர்வ

கடன்
கொடு
ஏழை மக்கள்
முன்னேற
இனாமாக்
கொடுக்காதே
சோம்பேறி
ஆகிவிடுவான்.
 
பணக்காரன

பணக்காரர்
பணத்தைப்
பறித்து
ஏழைகளுக்குப்
பகிர
நினைப்பவன்
மடையன்
ஏழையாக
இருந்து
முன்னேறியவன்தானே
பணக்காரனும்
ஏன்
ஏழையும்
முயன்றால்
பணக்காரனாகலாமே !
 
சிரிப்ப

வாய் விட்டுச்
சிரி
ஆயுள்
கெட்டி
மற்றவரை
புறம்
சொல்லி
சிரிக்காதே
ஆயுளுக்கு
அரை
வாழ்வு
 
நட்பு

வாழ்க்கையில்
நட்பு இல்லாத
வாழ்க்கை
நரகத்திற்குச்
சமானம்
அதற்காக
தகுதி
அற்றவர்களிடம்
நட்பு வைக்காதே
தகுதியற்ற
நட்பைவிட
நட்பே இல்லாதவராக
வாழ்வது மேல்
 
கெட்ட நட்பு

தேன் கூட்டிலே
சுரக்கின்ற
நஞ்சு

 
மரத்த மனம்

போர்வைக்குள்த்
தூங்குகின்ற
நித்திரை
 
பேராசை

தங்கப்
பாத்திரத்தில்
பாலை வெறுக்கின்ற
பூனை
 
பிள்ளை

இரு கிளை
இடை வெடித்த
இளந்தளிர்
அரும்பு
 
வளி

காய் வளர
தான்கருகி
வழிவிடும்
வாசனைப்
பூக்கள்
 
உதவி செயயும் சந்தர்பத்தைப் பெற்றவன்

சந்தோசத்தில்
கண்ணால்
பாயும்
குருதியாறு
 
மனதார உதவுபவன்

ஆடை
கொடுக்காமல்
மானத்தைக்
காத்தவன்
 
தூர நோக்கு

அறுவடைக்கு
முன்
விதைத்த
நெல்மணி
 
நல்லவருக்கு நாக்கு ஒன்று

நெற்றியிலே
அறைந்த
ஆணி
 
தன்னம்பிக்கை

நிமிர்ந்து
நடக்கின்ற
கூனல்
 
விரும்பாத கல்யாணம்

கசக்கின்ற
சர்க்கரைப் பாகு
 
பொறுமைக்கும் எல்லை உண்டு

பனி மலைக்குள்
தீப் பிளம்பு
 
உலோபியிடம் எதிர் பார்கும் உதவி

பாடுபட்டும்
கிடைக்காத
பயன்
 
கிராமத்து தலைவன்

படிக்காதவனிற்கு
கிடைத்த
நல்ல
பெறுபேறு
 
குடும்பத்தை விட்டு வெளியேறிய பெண்

தரையிலே
தெறித்த
மீன் குஞ்சு
 
அளகான விலை மாது

முத்தில்லாத
மூடியுள்ள
சிற்பிக் கோது
 
தன்நலவாதி

செவியிருந்தும்
கேட்காத
நல்லவர்கள்
 
கேட்காமலே உதவுகிறவன்

கொடி
படரத் தாங்கும்
மரக்கிளைகள்
 
தரம

காலில் குத்துவதெல்லாம்
முள்ளென்று
எண்ணாதே
ஏன்
வைரமாகவும்
இருக்கலாமே
 
அன்னியம

அன்னியம் என்பது
ஒவ்வொருவரின்
நிறத்திலேயோ
மொழியிலேயோ
ஐாதியிலேயோ
மதத்திலேயோ
இல்லை
அவரவர் மனத்தைப் பொறுத்ததே
 
அழுக்க

உன்
உடலில்
உள்ள
அழுக்குக்
கழுவும்
நீ
உன் மனதுள்
உள்ள
அழுக்கை
எப்போ
கழுவப் போகிறாய்
 
வாய்ப்பேச்சு

வாத்தியார்
வீட்டுப் பிள்ளை
வீதிச்
சண்டியன்
 
ஆக்கம

நறுமணம் வீசும்
அழகான மலர்
இறந்த பின்தானே
சுவையான
பழத்தை புசிக்கலாம்
 
பாரபட்சம

பாரத மாதா
மகள்
காவேரிக்கு
கர்நாடகாவோடு
மட்டுமல்ல
தமிழ் நாட்டுச்
சொந்தங்களோடும்
கட்டியணைத்துச்
சொந்தங் கொண்டாட
விருப்பம்
ஏன்
தடுக்கிறார்கள்
ஓ..
காவேரி என்பது
ஓர் பெண்ணின்
பெயர் என்பதாலோ என்னவோ
 
விதவைக் கோலம்

அவளின்
வண்ண
நிற ஆடையை
அடித்துத்
தோய்துப்
பிழிந்து
வெள்ளாடை கட்டி
வெளியே விட்டுள்ளார்கள்
சாயம் போனது
அவளின்
ஆடை மட்டுமல்ல
அவளின் பல வர்ணக்
கனவுகளும்தான்
 
வாழ்க்கைப் பயில்

கண்ணிலே தெரிகின்ற
காட்சிகள் எல்லாம்
இரவிலே தோன்றும்
கனவாகலாமோ..
ஆசைகள் கோடி
அரண்மனை கட்டும்
அசையாத மனங்கள்
இன்னமும் வெம்பும்
வாழ்ந்திடும் வாழ்கை
வாழ்ந்துபார் தெரியும்
புசித்தால்த் தானே
ருசியது புரியும்
பதுங்குவதெல்லாம்
புலியென்பதில்லை
பாய்கின்ற ஆற்றைப்
புலியெனலாமோ?
கோழைகளெல்லாம்
பிறப்பினில் இல்லை
படித்தவன் பல பேர்
கோழையாம் உலகில்
யாரிடம் முதுகில்
அழுக்குகள் இல்லை
யார் சுத்தமென்று
யார் யாரைச் சொல்வார்
போரிலே வென்றோம்
புகழதைப் பெற்றோம்
பாரிலே நிலங்கள்
பரவலாய் ஆண்டோம்
பாடையில் போகும்
பாழ்பட்ட உடலை
ஆறடி மண்ணின்
அடியிலே புதைப்பர்
மாதங்கள் ஆக
உடல் உக்கிப் போக
அது கூட உனக்குச்
சொந்தமாய் இல்லை
பாசங்கள் என்ன
பரம்பரைச் சொத்தா?
பந்தங்கள் என்ன
உக்காத துணியா?
தோளில் கை போட்டு
பேசிடும் நட்பும்
துன்பத்தின் போது
மாயமாய்ப் போகும்
நீர் உள்ள போது
துள்ளிடும் மீன்கள்
நீர் வற்றிப் போக
துள்ளித் தான் சாகும்
கால்கள் தரையில்
நடக்கின்ற போது
தரை காலை என்றும்
திட்டுவ தில்லை
ஏன் இதை மாந்தர்
எண்ணிடவில்லை
இதை விட உவமை
எங்கு நான் போவேன்
 
தான(அ)தர்மம்

கோயிலிலே
அன்னதானச் சமையல்
அமளியாக நடக்கிறது
சமையல்க் காரன்
வீட்டில்
இரண்டு நாள் பட்டினி
 
காதல்

காதலுக்கு
கண் இல்லை
உண்மைதான்
பொது இடங்கள்
முத்தத்தின்
மெத்தையாகிறது
 
காரம்

கடுகுக்குள்
இவ்வளவு காரமா?
தமிழீழத் தமிழர்கரின்
எழிர்ச்சி
 
சிலர்

ஊருக்குள்ளே
எரிமலையின் சீற்றம்
பேரலை வந்து
தீயை அணைக்கிறது
மிஞ்சியதையும் சேர்த்து
 
வாய்ப்பேச்சு

வாத்தியார்
வீட்டுப் பிள்ளை
வீதிச்
சண்டியன்
 
காலின் கீழ் வாழ்வு

ஒரு நாடக மேடை
அரங்கேறிடும் பாகம்
சுளல் மேடையில் நாமோ
சுழன்றாடிடும் வேஷம்
கொடு வாழ்களின் வீரம்
குறையாமலே போகும்
முடியாதது வாழ்வில்
குறை மாறிடும் சோகம்


பாய்களைப் போட்டு
வெகு நேரமுமாச்சு
பாவியின் கண்ணில்
துயில் பறந்தது காற்றில்
வாசனைப் பூவில்
வாழ்ந்திடும் தென்றல்
வழியது மாறி
குழியதில் போச்சே


துளிரதைக் கிள்ளு
பல கிளை வெடிக்கும்
பாதையை மாற்று
பல வழி உண்டு
மனதிலே சோகம்
யாருக்குள் இல்லை
பாரது பெரிது
பார் அதைச் சென்று
வேர்களுமின்றி மரமது இல்லை
காய்காத மரமும்
நிழல் தருமிங்கே


தாரத்தை நாங்கள்
தாசியைப் போல
தரம் குறைவாக
எண்ணுதல் உண்டோ
கள்ளியில் சுரக்கும்
பாலதை நாங்கள்
தாய்ப்பாலோடு ஒப்பிடல் முறையோ

ஆசைகள் கோடி
யாருக்கு இல்லை
ஆசைகள் இன்றி
உயர்வது ஏது
கரையதைக் கொஞ்சும்
அலையதாய் இருந்தால்
கடலலை என்பர்
கண்ணியம் கொள்வர்
கரையதை மிஞ்சும்
கடலலையாகி
கருகிடும் வாழ்வு
உவர் மண்ணில் பயிராம்

பெரியதும் ஒரு நாள்
சிறியதாய்தானே
பிறந்ததை யார்தான்
மறுப்பதற்கில்லை
முளைப்பது எல்லாம்
முனை சிறிதாக
இருப்பது வழக்கம்
ஆயிரமடியில் வரைபவையெல்லாம்
ஒரு சிறு தடியைக்
கையிலே கொண்டே

உயர்வதைத் தேடு
துயர் பறந்தோடும்
உன்னத வாழ்வு
காலின் கீழ் உண்டு
 
வாழ்த்த

கொஞ்சும் அழகு கவி
குறைவில்லாச் செல்ல மொழி
பஞ்சுக் கன்னங்கள்
பதுங்கும் குழி அதனிடையே
மிஞ்சுகின்ற பாச இளை
தஞ்சம் அதற்கு எம் பாச இளை
உன் பிஞ்சுப் பாதங்கள்
அதை ஏந்தும் எம் கரங்கள்
சொர்க்கம் எது என்பேன்
எம் சொற்கம் நீதானே
தாய்குத் தாய்மை தந்தாய்
தெரு வாயை மூடி வைத்தாய்
தந்தையின் தோள்களிலே
தவழ்ந்து வரும்
புற் தரை நீ
பஞ்சுப் பாதம்தான்
பாலைவன நீருற்று
வரண்ட மனத் தரையில்
வாடாத பூந்தோட்டம்
சிணுங்கும் குரல் கேட்டால்
எம் ஜீவன் நாம் மறப்போம்
பசித்த மனத்திடையே
பாலாகச் சுரந்தாய் நீ
இருண்ட பாதையிலே
ஆதவனாய் நீ உதித்தாய்
அட்சய பாத்திரத்தில்
அன்பை நாம் ஊட்டிடவே
நான் உனை அணைத்திடவே
என்னுயிரே அணைகிறதே
பசி மறந்தோம்
பணி மறந்தோம்
பாசமிகு எம் மகளே
பட்டுச் சேலையிலே
பாசமிகு ஏணை கட்டி
எம் மனதுள்த் தூங்க வைப்போம்
வாழ்க நீ பல்லாண்டு
வளங்களெல்லாம்
வலம்வரவே
ஆண்டவன் துணையிருப்பான்
அன்பே எம் மகளே
 

கவிதைகள் பற்றிய உங்கள் கருத்துக்கள் எதிர்பார்க்கப்படுகிறது

shelvazuggmbh@bluewin.ch

thubeegmbh@bluewin.ch

 

Copyright © 2006-2007 THUBEE GMBH. All Rights ® Reserved.